Friday, July 31, 2015

மட்டக்களப்பு ஸ்ரீவிக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபை 
  நடாத்திய 50 ஆண்டுவிழாவில்12.07.2015 
வில்லிசை பொருள் :- ''ஆசையைவென்ற அடியவர்''


கலைப்பணியில் 50 ஆண்டுகள்
யாழ் திருமறைக்கலாமன்றம் 28.06.2015 நடாத்திய தமிழ்விழாவில்
வில்லிசை  பொருள் :- "சிலம்பு சிரித்தது"



Thursday, July 30, 2015

நாகலிங்கம் கணபத்ப்பிள்ளை                               (சின்னமணி) 

இலங்கையில் வில்லிசைக்கு வித்திட்டார் 

                 பருத்தித்துறையிலே மாதனை எனும் கிராமத்தில் கலை அறிவும் ஆற்றல்களும் மிக்க நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக 30.03.1936ல் அவதரித்தார் இவருடைய இயற்பெயர் கணபதிப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை மாதனை மெதடிஸ் மிஷன் பாடசாலையில் கற்றுக்கொண்டார். ஆதன்பின்னர் ஆறாம்வகுப்பில் இருந்து எட்டாம் வமுப்புவரை புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையில் கல்விபயின்றார் தனது எட்டுவயதிலே குழந்தைக் காத்தானாக நடித்தார். ஆத்தோடு குறவன் குறத்தி நாடகத்திலும் நடித்துக் கொண்டார். ஓன்பதாம் வகுப்பில் இருந்து ஏழாலை அரசினர் உயர்தரப் பாடசாலையில் படித்து சிரேஷ;ட கல்வி தராதர பரீட்சையில் தோற்றினார்.

        இத்தகைய கல்விக் காலத்தில் கீதாஞ்சலி நல்லையா அவர்களினால் தயாரிக்கப்பட்ட காவடி நடனத்தில் பங்கு கொண்டு கொழும்பில் விக்டோறியா பூங்காவில் நடைபெற்ற போட்டியில் பரிசையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் 1949ல் அதேபாடசாலை மாணவர்களுடன் கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்ட கப்பல் பாட்டு கலை நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் பரிசிலையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.

             கீதாஞசலி ஏ.மு. நல்லையா நாட்டியக் கலைஞரிடம் நடனம் சார்ந்த நுட்பங்களைக் கற்றறிந்து தன்னை வளர்த்துக் கொண்டார். அதன்பின்னர் நடனம், காவடி, கரகம், போன்ற கலை நிகழ்வை தனது சகோதரனான க. நா. நவரத்தினம் உடன் இணைந்து செயற்பட்டு பல பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.1957ம் ஆண்டில் ஆசிரியராக நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ் பாடசாலையில் தமிழ், ஆங்கிலப் பாட ஆசிரியராக கடமையாற்றினார் அதே நேரம் கொழும்பில் தங்கியிருந்த இசைநாடக கலைஞர்களுடன் தொடர்புபட்டு கலைவாணரிடம் நாடகம், வில்லிசை, சார்ந்த நுட்பங்களை கற்றுக் கொண்டார் 1960ல் அசு;சுவேலியை சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்து இல்லறத்தை நல்லறமாக நடாத்தி வந்ததுடன் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணை பாற்சபையில் கணக்காளராகவும் கடமையாற்றினார்.

              நாடகத்துறையில் ளு.வு. அரசுடன் இணைந்து கலைவாணர் நாடக மன்றத்தின் ஸ்தாபகரில் ஒருவராக செயற்பட்டார். மேலும் வண்ணை கலைவாணர் மன்றத்தால் நிகழ்த்தப்பட்ட நாடகங்களான இன்பக்கனவு, தில்புசுல்த்தான், வீரமைந்தன், சாம்ராஜ்அசோகன், சரியாதப்பா, போன்ற நாடகங்களில் பங்கெடுத்தார். 1962ல் அரிச்சந்திரா மயானகாண்டத்தில் நான்கு வேறுபட்ட குணஇயல்புகள் கொண்டபாத்திரங்களாக நடித்தார். நாரதராகவும், நட்சத்திரராகவும், அயலாத்துப் பிள்ளையில் ஒருவராகவும், சுடலையில் மேளம் அடிப்பவராகவும் நடித்தார். 1970ல் லாலா சோப் நடாத்திய நாடகப் போட்டியில் சத்திய கீர்த்தியாகவும் அதனைவிட சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் யமன் பாத்திரமாகவும் காத்தவராயன் கூத்தில் முந்காத்தான், கிருஷ;ணர், ஆரியமாலாவாக, வண்ணார நல்லியாக, மந்தரையாக என பல பாத்திரங்களை ஏற்று நடித்து நாடக உலகில் புகழை ஈட்டிக் கொண்டவர். பாடும் திறன் பாத்திரப் பொருத்தம் நடிக்கும் முறை தன்னை பயிற்றுவித்துக் கொள்ளும் தரம், கற்பனாசக்தி, என பன்முகச் சிறப்புக் கொண்டவர்.

வில்லிசைத் துறையை தனதாக்கிகொண்டார். 'தோன்றிற் புகழொடு தோன்றுக...' என்ற வள்ளுவரின் குறளக்கு ஏற்புடைய கலைஞனாக வில்லிசைத் துறையில் பிரவேசித்தார். ஆக்காலத்தில் இலங்கையில் வில்லிசை நிகழ்த்தி வந்த திருப்புங்குடி ஆறுமுகம் அவர்களின் வில்லிசை நிகழ்வில் க. நா. கணபதிப்பிள்ளை அவர்கள் நகைச்சுவைக் கலைஞனாக, பக்கப்பாட்டுகாரராக, உடுக்கு வாசிப்பவராக இணைந்து பலமேடைகளில் மக்களைச் சிரிக்கழவத்தார். ஆதன் பின்னர் 02.02.1968ல் தொண்டமானாறு செல்வச் சந்நிதியில் திருப்புங்குடி ஆறுமுகத்தின் ஆசீர்வாதத்துடன் வில்லிசை அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். ஆன்றில் இருந்து கலைவாணர் வில்லிசைக் குழு என்ற பெயரில் அனைத்து இடங்களிலும் இவரது ஆற்றுகை நிகழத்தொடங்கியது.

               இத்தகைய க. நா. கணபதிப்பிள்ளை அவர்களை உலகப்புகழ் கொண்ட வில்லிசைக் கலைவிளக்கு என்றால் அது மிகையாகாது ஈழத்தில் தவில்மேதை தட்சனாமூர்த்தி எப்வாறு பேசப்படுகின்றாறோ, அதேபோல் இசைநாடகத்தில் வைரமுத்து அவர்கள் எவ்வாறு பேசப்படுகின்றாரோ, இந்தியத்திரைப்பட உலகில் சிவாஜிகனேசன் புகழப்படுகின்றாரோ அவற்றையும் கடந்து ஈழம்தந்த வில்லிசைக் கலைஞர் வில்லிசைப்புலவர் என்றால் க.நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)தான் மக்கள் எங்கு பரந்து வாழ்கின்றார்களோ அந்த இடம் எங்கும் வில்லிசையால் கொடிகட்டிப் பறந்தவர். இவருடைய வில்லிசை இல்லாத ஆலயத்திருவிழாவே கிடையாது. சிறியவர் முதல் பெரியவர் வரை, பாமரர் முதல் படித்தவர் வரை வறியவர் முதல் செல்வந்தர் வரை அனைவராலும் பேசப்படுபவர், விரும்பப்படுபவர், புகளப்படுபவர் க.நா. கணபதிப்பிள்ளை ஆவார். 

வில்லிசைக்குரிய  கருப்பொருள், கதைப்பொருள் பல்வேறுபட்டனவாக அமையும். துனிக்கதைகளாக, தொடர்கதைகளாக, கிளைக்கதைகளாக எனக் கூறலாம். ஆவற்றுள்ளே மகாபாரதம், இராமாயணம், இதிகாசம் புராணம், வரலாற்றுக் கதைகள் விசேடநாட்கள், சரித்திரக்கதைகள், கிறீஸ்தவக்கதைகள், திருக்குறள், நாளடியார் நீதி நூல், பெரியார்கள் எனப் பலநூற்றுக் கணக்கான கதைகளை ஆற்றுகைப் படுத்திக் கொண்டார்.

          தானே வில்லிசைக்குரிய கட்டமைக்பை அமைத்துக் கொள்வதனால் கதைசொல்லும் முறை, கதைவிளக்கம், நகைச்சுவை, பாடல் ஏற்ற இறக்கங்கள், சுருதி, லயம், தாளம், பக்கவாத்தியம் என்பவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு ஆற்றுகைக்குரிய நேரகாலம் அறிந்து. பார்வையாளர் தரம் அறிந்து இரசிகர்களை எப்படித் தன்பக்கம் கொண்டு வரவேண்டும் என்ற புத்திசாதுரியத்துடன் ஆரம்பத்தில் இருந்து வில்லிசை முடியும் வரை அனைத்து பார்வையாளர்களையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திறமை கொண்டவர். யாராவது எழுந்தால் அவர்களை எப்படியோ சுவாரிசமாக இருத்த்தும் கெட்டித்தனம் கொண்டவர்

வில்லிசைக் கலையை சீர்குலைக்காது பண்பாட்டுடன் எடுத்துச் சென்ற பெருமை க.நா. கணபதிப்பிள்ளையைச் சார்ந்தது. தனக்கென தனித்துவமான உடையுடன் 'ஆள்பாதி ஆடைபாதி' என்பார்கள் அதுபோல பண்பாட்டான உடை இரசிகர்களைக் கவரவேண்டும் என்பதற்காக தேவையற்ற பகிடிகள் இன்றி இரண்டு பட்ட அர்த்தமில்லாது கேலித்தனமில்லாது பார்வையாளர்களுக்கு சரியான சேதியைச் சொல்லி நேர்த்தியான முறையில் வில்லிசை நிகழ்த்துவார் கதைக்கு ஏற்ப இரச பாவங்களைத் தோற்றுவித்து தேவையான இடத்தில் பாத்திரங்களாகவும் மாறி வில்லிசையை நிகழ்த்தி வில்லிசைக்கு என இலக்கணம் வகுத்துக் கொண்டார்.

              இலங்கையில் மட்டுமல்லாது பல நாடுகளுக்கும் சென்று புலம்பெயர் தமிழர்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாது உலகத்தையும் வியக்கவைத்தார் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, சுவிஸ்லாந்து என பலநாடுகளிலும் வில்லிசைக் கலையை விஸ்தரித்தார் அதனூடாகப் பல பட்டங்களையும் பெற்றுக் கொண்டார். வில்லிசைவேந்தன், வில்லிசைப்புலவர், வில்லிசைப் பேரொளி, பல்கலை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி, வில்லிசை திலகம், முத்தமிழ் மாமணி, கலாவினோதன், முத்தமில் வித்தகன், நவரசக்கலைஞன், ஜனரஞ்ச நாயகன் என இன்னும் பல பட்டங்கள்.

    கலைக்காக வாழ்ந்தார்கள் கலையை வளர்த்தார்கள், கலையைப் புனிதப்படுத்தினார்கள். ஏனப் பலகலைஞர்கள் உண்டு அத்தகைய கலைஞர்களுள் சிலர் தங்கள் வாழ்வை ஏழ்மையிலும், மதுபோதையிலும், ஆணவத்திலும் அழித்தவர்களும் உண்டு. ஆனால் க.நா. கணபதிப்பிள்ளை சின்னமணியவர்கள் தனக்கொன உலகத்தில் வில்லிசைக்கொர் இடத்தைப் பிடித்தது மட்டுமன்றி தன்வாழ்வில் சிறந்த ஒரு பெருங்கலைஞன் என வாழ்ந்தும் காட்டி உள்ளார்.

        அத்துடன் தான்உயிருடன் இருக்கும் போதே தனக்கு என வில்லிசையில் மாணவனை உருவாக்கி நாகராசா மதியழகன் 12.07.2013ல் உழவிக்குளப்பிள்ளையார் ஆலயம் அச்சுவேலியான தனது கோவிலில் அரங்கேற்றத்தை நிகழ்த்தவைத்து ஆசீர்வாதத்தினையும் தந்துள்ளார் அந்தவகையில் தற்பொது பலஇடங்களிளும் நாகராசா மதியழகன் ஆகியநான் வில்லிசையை நிகழ்த்தி வருகின்றேன் அவருடன் பதினேழு வருடங்கள் வில்லிசைநிகழ்த்தியவன், அது மட்டுமல்ல எனது இரண்டாவது சகோதரன் நாகராசா சிவபாதசுந்தரம் அவர்கள் பத்து வருடத்திற்கு மேல் க.நா. கணபதிப்பிள்ளை சின்னமணியுடன் வில்லிசை நிகழ்தியவர் இவர் தற்பொழுது பிரானஸ் நாட்டில் வில்லிசை நிகழ்த்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வில்லிசைக்கலையை என்னிடம் தந்ததைஇட்டு மிகவும் பெருமைப்படுவதுடன் இதனை அழியவிடாது தொடர்ந்து மக்கள்மத்தியில் எடுத்துச்செல்வேன், எடுத்துச் செல்கின்றேன் அத்துடன் இதற்கு ஒத்தாசையாக அம்பிகாவதி விஜயநாதன், தவநாதன் றொபேட், முருகேசு சடாச்சரம், சிவசுப்பிறமணியம், பேன்றவர்கள் பக்கபலமாக உள்ளார்கள். 

     எனவே இந்தவேளையில் அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவருடைய குடும்பத்தவர்க்கும், பிள்ளைகளுக்கும் இந்த நேரத்தில் ஆறுதல் கூறுவதுடன் நன்றியையும் தெரிவித்து நிற்கின்றேன்

                                                                                                                   இப்படிக்கு
                                                                                                                    அன்புள்ள 
A.N. மதியழகன்
'கலைவாணர் வில்லிசைக்குழு'
கோணாவளை வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்

Wednesday, July 29, 2015

கலாவினோதன் சின்னமணி ஐயா.........
Kalairuban Kanapathipillai's photo.





















மாதனையில் உதித்தாய்
மனைபுகுந்தாய் அச்சுவேலியில்
அன்பர்களின் ஆசிபெற்று
ஆங்கில ஆசிரியரானாய்
திருப்புங்குடி ஆறுமுகத்தின்
திருப்திநிறை காஷ்யக் கலைஞன் - நீ
கலைச்சிறப்பாலும் கலைத்திறனாலும்
கலைவாணரிடம் கலைபயின்றாய்
ஆற்றலின் வேகத்தால்
ஆற்றுகைக் கலைபுகுந்தாய்
சந்நிதியில் சாதனை கொண்டு
சான்றோர்கள் மத்தியில் நின்று
இதிகாசம் புராணம்
இராமாயணம் பாரதம்
நீதிநூல் திருக்குறள்
நாளடியார் நாளைய கதையென
இலக்கியததை இன்சுவையாய்
இலங்கை இந்தியா சிங்கபூர் மலேசியா கனடா சுவிஸ் என
உலகத்திற்கு உரைத்துநின்ற
உலகம்போற்றும் உத்தமன் - நீ
வில்லிசைக்கோர் வித்தகன்
தெ;ள்ளுதமிழ் சொல்லெடுத்து
தித்திக்கும் வில்லிசையால்
திக்கெட்டும் உன்குரல் கேட்க வைத்தவன் -நீ
உம்பட்டங்கல் பலஉள
அவற்றில் சிலஇவை
வில்லிசை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி,
வில்லிசைத் திலகம், வில்லிசைப் புலவர்
வில்லிசைப் பேரொளி பல்கலை வேந்தன்,
முத்தமிழ் மாமணி, முத்தமிழ் வித்தகன்,
நவரசக் கலைஞன் ஜனரஞ்சக நாயகன், என,
உம்பிரிவால் உளம்வாடி
உம்மையே தினம்நாடும்
 சிஷ்யன்
நா. மதியழகன்
உம்பணியை நாம்தொடர்வோம்








என்னுடைய இரண்டு சகோதரர்களும் சின்னமணி ஐயாவோடு வில்லிசை செய்தகாலத்தில் எடுக்கப்பட்ட படம்
நாகராசா சிவபாதசுந்தரம்
நாகராசா சிங்கராசா



அளவெட்டி பிள்ளையார் ஆலயத்தில் வில்லிசையின்போது 1997